இவ்வளாகம் ஐந்து வருட பி.ஏ.எல்எல்.பிபாடத்திட்டம்மற்றும் எல்எல்.எம் பாடத்திட்டதின்கீழ்பயிலும்சுமார் 1300 மாணவர்களுக்குஇடம்அளிக்ககூடியவகையில்அமைந்துள்ளது. வகுப்பறைகள் மற்றும் பிற கட்டிடங்கள் 15.56 ஏக்கர் நிலப்பரப்பில்ரூ. 57.41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, அகில இந்திய பார் கவுன்சிலின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி செயல்பட்டுவருவதோடுசர்வதேச தரத்தில் அமைந்துள்ளது. தரத்தை மேம்படுத்தும் நோக்கில், உலகளாவிய வரலாற்றுத் தீர்ப்புகளை பகுப்பாய்வு செய்யும் வசதியுடன்கூடியஸ்மார்ட்வகுப்புப்பறைகள், 2000 வாசகர்களுக்கு மேல் அமரக்கூடிய ஒரு உயர்தர தொழில்நொட்ப நூலகம், மாதிரி நீதிமன்றம், 1000 மாணவர்கள்/பார்வையாளர்கள்அமரும்குளிரூட்டப்பட்டபார்வையாளர்அரங்கம், உட்புறம் மற்றும் வெளிப்புறம் அரங்கங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனி விடுதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், முழு வளாகத்தையும் உள்ளடக்கிய கண்காணிப்பு கேமராக்கள், பயோ மெட்ரிக் வசதிகள், வைஃபை வசதிகள் மற்றும்பலவசதிகளுடன்இவ்வளாகம்அமைந்துள்ளது.