கல்லூரி உதவித்தொகை

கல்லூரி உதவித்தொகைப் பெறுவதற்கான கல்வித்தகுதி

(அரசு ஆணை.M.S எண். 310, (சமூக நலன்) தேதி 4.4.77)

1977-78 முதல் போஸ்ட் மெட்ரிக் படிப்புகள் சம்பந்தமான  அனைத்து வகையான உதவித்தொகைகளும் (அதாவது குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாதவை)  90% வருகைக்கு உட்பட்ட தகுதியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும்.

பல்கலைக்கழக உதவித்தொகை

அறக்கட்டளை  மற்றும் உதவித்தொகை

அறக்கட்டளை

  • 1. ஜீவா அறக்கட்டளை
  • 2. திருமலைசாமி ஆதிசேஷன் அறக்கட்டளை
  • 3. நீதிபதி பிஎன் பகவதி அறக்கட்டளை
  • 4. ஸ்ரீ. ஏ.எஸ் வெங்கட்ராம ஐயர் அறக்கட்டளை
  • 5. நீதிபதி கி. வீராசாமி அறக்கட்டளை
  • 6. திரு. பி. ஆனந்த ராவ் அறக்கட்டளை
  • 7. பேராசிரியர் ஜே. பால் உதவித்தொகை
  • 8. ஸ்ரீ ரமண ராவ் பட்நாயக் அறக்கட்டளை
  • 9. ஸ்ரீ அயோத்தி ராமையா அறக்கட்டளை

 1. ஜீவா அறக்கட்டளை

  • வழங்குபவர்: தமிழ்நாடு அரசு
  • கார்பஸ் நிதி: ரூ. 25,00,000/-
  • விருது பெறுவதற்கான நிபந்தனைகள்

ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இணைவு பெற்ற அரசு சட்டக்கல்லூரிகளில் 3ஆண்டு/5ஆண்டு பி.எல் பட்டப்படிப்பு மற்றும் எம்.எல் பட்டப்படிப்பில் ஒவ்வொரு கிளையின்  கீழ்  முதல் 5 இடங்களை பெற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் அனைத்து பாடங்களிலும் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற வேண்டும்.

NB: உதவித்தொகையானது கார்பஸ் நிதி கணக்கில் திரண்ட வட்டி இருப்பிற்கு உட்பட்டது.

2. திருமலைசாமி ஆதிசேஷன் அறக்கட்டளை

  • வழங்குபவர்: திரு. ஆதிசேஷன், முன்னாள் துணைவேந்தர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்.
  • கார்பஸ் நிதி: ரூ. 25,000/-
  • விருது பெறுவதற்கான நிபந்தனைகள்
  • 3 வருட பி.எல் பட்டப்படிப்பில் முதல் இடத்தைப்   பெறும் மாணவர்.
  • 5 வருட பி.எல் பட்டப்படிப்பில் முதல் இடத்தைப்    பெறும் மாணவர்.
  • எம்.எல் பட்டப்படிப்பில் முதல் இடத்தைப்  பெறும் மாணவர்க்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

3.  நீதிபதி P.N. பகவதி அறக்கட்டளை

  • வழங்குபவர்:  மாண்புமிகு நீதிபதி P.N. பகவதி
  • கார்பஸ் நிதி: ரூ. 25,000/-
  • விருது பெறுவதற்கான நிபந்தனைகள்

“மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டம்” பாடத்தில் பின்வரும் படிப்புகளில் அதிக மதிப்பெண்களைப் பெறும் வழக்கமான மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தங்கப் பதக்கம் வழங்கப்படும்:

  • பி.எல் 5 ஆண்டு பட்டப்படிப்பு
  • பி.எல் 3 ஆண்டு பட்டப்படிப்பு.

 “மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டம்” பாடத்தில் ஒரு மாணவர் மிக உயர்ந்த மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அந்த ஆண்டில் பரிந்துரைக்கப்பட்டபடி மொத்த மதிப்பெண்களில் 50%க்கு் குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.

4.  ஸ்ரீ. A.S. வெங்கட்ராம ஐயர் அறக்கட்டளை

  • வழங்குபவர்: ஸ்ரீ. ஏ.எஸ் வெங்கட்ராம ஐயர்
  • கார்பஸ் நிதி: ரூ. 25,000/-
  • விருது பெறுவதற்கான நிபந்தனைகள் ஒவ்வொரு வருடமும் எல்எல்.எம் பட்டப்படிப்பில் “வணிகச் சட்டத்தில்” முதல் இடத்தைப் பெறும் மாணவர்க்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

5.  மேன்மை பொருந்திய  நீதிபதி  கே.வீரசாமி அறக்கட்டளை

  • வழங்குபவர்: மேன்மை பொருந்திய நீதிபதி கே. வீரசாமி
  • கார்பஸ் நிதி: ரூ. 1,25,000/-
  • விருது பெறுவதற்கான நிபந்தனைகள்

பின்வரும் படிப்புகளில் “அரசியலமைப்பு சட்டத்தில்” முதல் இடத்தைப் பெறும் ஒரு வழக்கமான மாணவர்க்கும்

  • பி.எல் 5 ஆண்டு பட்டப்படிப்பு
  • பி.எல் 3 ஆண்டு பட்டப்படிப்பு

எம்.எல் (அரசியலமைப்பு சட்டம் & மனித உரிமைகள்) பட்டப்படிப்பில் முதல் இடத்தைப் பெறும் மாணவர்க்கும் வழங்கப்படும்.

6.  திரு பி ஆனந்த ராவ் அறக்கட்டளை

  • வழங்குபவர்:: பி ஆனந்த ராவ் 
  • கார்பஸ் நிதி: ரூ 50,000 / –
  • விருதுக் பெறுவதற்கான நிபந்தனைகள்

 3/5 வருட பட்டப்படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் நிறுவனச் சட்டத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கும் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் இடத்தைப் பெறும் மாணவருக்கும் திரு. பி. ஆனந்த ராவ் அறக்கட்டளைப் பெயரில் ஒரு தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

7.  ஜே. பால் உதவித்தொகை

  • வழங்குபவர்: பேராசிரியர் ஜே. பால், முன்னால் முதல்வர், அரசு சட்டக் கல்லூரி, மதுரை.
  • கார்பஸ் நிதி: ரூ. 1,00,000/-
  • விருது பெறுவதற்கான நிபந்தனைகள்
  1. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணைவு பெற்ற சட்டக்கல்லூரிகளான டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை, அரசு சட்டக் கல்லூரி, மதுரை, மற்றும் அரசு சட்டக் கல்லூரி, திருச்சி, இவற்றில் ஒவ்வொரு  கல்லூரியிலிருந்தும் எம்.எல் பட்டப்படிப்பைத் தொடரும்  அனைத்து கிளையை சார்ந்த மூன்று  மாணவர்களுக்கு் உதவித்தொகை வழங்கப்படும்.   முதல் முயற்சியிலேயே பி.எல் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண்களுடன்  தேர்ச்சி பெற்று அந்தந்த கல்லூரியில் எம்.எல் பாடத்திட்டத்தில் சேர வேண்டும். 
  2. மூன்று வருட மற்றும் ஐந்து வருட பி.எல் பட்டப்படிப்பில் மாற்று ஆண்டுகளில் இருந்து வரும் எம்.எல் மாணவர்களுக்கும்  உதவித்தொகை வழங்கப்படும்.
  3.  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் ஒப்புதலுடன் ரூ. 3,000/- மதிப்புமிக்க உதவித்தொகையை அந்தந்த எம்.எல் பட்டப்படிப்புக்கான சட்டப் பாடத்தில் நிலையான பாடப் புத்தகங்கள் வடிவில் வழங்கப்படும்.

8.  ஸ்ரீ. வி.வி. ரமணா ராவ் பட்நாயக் அறக்கட்டளை

  • வழங்குபவர்: ஸ்ரீ. வி.வி. ரமணா ராவ் பட்நாயக்
  • கார்பஸ் நிதி: ரூ. 1,00,000/-
  • விருது பெறுவதற்கான நிபந்தனைகள்

இரண்டு தங்கப்பதக்கம் மற்றும் இரண்டு ரொக்கப்பரிசும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் மூன்று மற்றும் ஐந்து வருட பட்டப்படிப்பில் “சாட்சிய சட்டத்தில்” மிக அதிக மதிப்பெண்கள் பெற்ற இரண்டு மாணவர்களுக்கு  வழங்கப்படும்.

9. ஸ்ரீ வி அயோத்தியா ராமையா அறக்கட்டளை

  • வழங்குபவர்: ஸ்ரீ வி அயோத்தியா ராமையா
  • கார்பஸ் நிதி: ரூ. 1,00,000/-
  • விருது பெறுவதற்கான நிபந்தனைகள்

இரண்டு தங்கப்பதக்கம் மற்றும் இரண்டு ரொக்கப்பரிசும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் மூன்று வருட பட்டப்படிப்பில் “உரிமையியல் நடைமுறை சட்டத்தில் (சி.பி.சி.)” மிக அதிக மதிப்பெண்கள் பெற்ற இரண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்.