Dr.Ambedkar Government Law College Chennai, Old Campus

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, 130 ஆண்டுகால மதிப்புமிக்க நிறுவனம், 1891 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது, அதன் இருப்பிடத்தின் சிறப்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்தது. இக்கல்லூரிநாட்டின் இரண்டாவது பழமையான கல்லூரி என்ற பாக்கியத்தையும், தென்னிந்தியாவின்முதல் சட்டக் கல்லூரி என்றதனிச்சிறப்பையும் பெற்றது.முதலில் ‘மெட்ராஸ் சட்டக் கல்லூரி’ என்று பெயரிடப்பட்டது, பின்னர் 1991 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நூற்றாண்டு நினைவாக ‘டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி ‘ என்று பெயர்மாற்றம்செய்யப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி திரு ஆர்.வெங்கடராமன் (1987-92), முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள்- திரு பதஞ்சலி சாஸ்திரி (1951 – 54), திரு கோகா சுப்பராவ் (1958 – 1967 ), திரு பி.சாதசிவம் (2013), முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்- திரு வி.ஆர்.கிருஷ்ணா அய்யர், திரு பி.சத்யநாராயண ராஜு, திரு. வி.பாலகிருஷ்ணா ஈராடி, திருமதி. பானுமதி, எண்ணிலடங்காஉச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் திரு.எம் கற்பகவினாயகம், திரு. வி.பெரியகருப்பையா, திரு.பி.டி தினகரன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் திரு பி.சிதம்பரம் உட்பட, மாநில முதல்வர்கள். திரு கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி உள்ளிட்ட, இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவர் திரு. சி.சங்கரன் நாயர், மற்றும் பல அரசு அதிகாரிகள் உட்பட பல புகழ்பெற்ற மாணவர்களைக் கொண்ட உயர் மதிப்புமிக்க பதிவைக் இக்கல்லூரி கொண்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, நீதிப்பேராணைமனு எண்: 11806 0f 2017 மற்றும் 28.06.2018 தேதியிட்ட அரசுஆணைஎண் : 188 / 2017, வாயிலாக உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போருர்தாலுகாவில்உள்ளபுதுப்பாக்கத்தில் அமைந்துள்ளது.இவ்வளாகம் 02.07.2018 அன்று திறந்து வைக்கப்பட்டது.