கல்வித்தகுதி

 5 வருட படிப்பிற்குக்கான  கல்வித்தகுதி

தமிழக அரசின் மேல்நிலைத் தேர்வுக்கு இணையான, 10+2 முறையின் கீழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற, சிண்டிகேட் மூலம் அங்கீகரிக்கப்பட்ட 45விழுக்காட்டிற்கு  குறையாத மதிப்பெண் பெற்ற நபர்கள்  விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.  எஸ்சி/எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு எல்எல்.பி சேர்க்கை விதிமுறைகளில்  5ஆண்டு பட்டப்படிப்பிற்கு பரிந்துரைக்கப்பட்ட  குறைந்தபட்ச மதிப்பெண்களிலிருந்து   5% மதிப்பெண் தளர்வு  வழங்கப்படுகிறது.

முதுநிலைப் படிப்பிற்குக்கான  கல்வித்தகுதி

 பி.எல்/எல்எல்.பி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற, மூன்று வருட பி.எல்/எல்எல்.பி பட்டப்படிப்பின் அனைத்து மூன்று வருடங்களிலும் அல்லது ஐந்து வருட பி.எல்/எல்எல்.பி பட்டப்படிப்பின்  அனைத்து ஐந்து வருடங்களிலும் மொத்த மதிப்பெண்களில் 50விழுக்காட்டிற்கும் குறையாமல் மதிப்பெண் பெற்ற நபர்கள் முதுநிலைப் பட்டப்படிப்பிற்க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர். எஸ்சி/எஸ்டி சமூகத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 5% மதிப்பெண் தளர்வு அளிக்கப்படுகிறது.